Paristamil Navigation Paristamil advert login

தொந்தி குறைய எளிய உடற்பயிற்சி

தொந்தி குறைய எளிய உடற்பயிற்சி

1 தை 2023 ஞாயிறு 17:00 | பார்வைகள் : 10405


 முதலில் விரிப்பில் மல்லாந்து படுத்துக் கொள்ள வேண்டும். இரண்டு கைகளையும் உடலின் பக்கத்தில் தளர்ந்த நிலையில் வைக்கவும். தலை,கைகள்,கால்கள் மற்றும் உடல் முழுவதும் மிகவும் தளர்ச்சியான நிலையில் வைக்கவும். 

 
பிறகு மூச்சை இழுத்துக் கொண்டே தலையை தூக்காமல் கைகளைக் கொண்டு தரையை அழுத்தாமல் செய்யவும். கால் கட்டை விரல்களை சேர்த்து வைத்து மேலே தூக்கவும் ரொம்பவும் மேலே தூக்கி விட கூடாது. திருப்பி கால்களை கீழே இறக்கும் போது மூச்சை வெளியே விட்டுக் கொண்டே மெதுவாக இறக்கவும் 
 
குதிங்கால்களை எக்காரணத்தைக் கொண்டும் தரையை தொடக் கூடாது. அப்படி தொட்டு விட்டால் பயிற்சி முடிந்துவிடும்.இப்படி ஒரு நாளைக்கு 25 முறை செய்ய வேண்டும் புதியவர்கள் 10 முறை செய்தால் போதும். நன்கு பயிற்சி பெற்றபிறகு 50 முறை கூட செய்யலாம். 
 
வயிற்றில் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களும் இப்பயிற்சியை மேற்க்கொள்ளக்கூடாது. கர்ப்பிணிகள் முதல் மூன்று மாத கர்ப்பம் வரையில் மட்டுமே இப்பயிற்சியை செய்தல் வேண்டும். ஆரம்ப நாட்களில் வயிறு, முதுகெலும்பு, தொடை போன்ற இடங்களில் வலி எடுக்கும். 
 
வலியை பொருட்படுத்தாமல் தொடர்ந்து பயிற்சியைப் பழகி வந்தால், படிப்படியாக வலியும் குறையும், வயிற்றில் உள்ள தேவையில்லாத சதையும் குறையும்.. 
 
இந்த பயிற்சி முழுக்க முழுக்க வயிற்றுக்காகவே உள்ள பயிற்சி இப்பயிற்சியை தொடர்ச்சியாக செய்து வந்தால் தொந்தி படிப்படியாக குறைவதை காணலாம். இடுப்பு தேவையில்லாத சுற்று சதை குறைந்து வலிமை பெறும். முதுகெலும்பும் வலிமை பெறும் தொடை பகுதியும் வலிமை பெறும்.

எழுத்துரு விளம்பரங்கள்