Paristamil Navigation Paristamil advert login

ஜனாதிபதி மக்ரோன் மீதான நம்பிக்கை... இதுவரை இல்லாத அளவு வீழ்ச்சி!!

ஜனாதிபதி மக்ரோன் மீதான நம்பிக்கை... இதுவரை இல்லாத அளவு வீழ்ச்சி!!

4 ஐப்பசி 2024 வெள்ளி 07:00 | பார்வைகள் : 3419


தொடர் விமர்சனங்களுக்கு உள்ளாகி வரும் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன், இதுவரை இல்லாத அளவு நம்பிக்கை இழப்பினைச் சந்தித்துள்ளார்.

நாட்டு மக்களில் வெறுமனே ”22% சதவீதமானவர்கள் மாத்திரமே ஜனாதிபதியை நம்புவதாக” நேற்று ஒக்டோபர் 3, வியாழக்கிழமை வெளியான கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

2017 ஆம் ஆண்டில் முதன் முறையாக மக்ரோன் ஜனாதிபதியானதில் இருந்து அவர் பெற்ற மிகக் குறைந்த நம்பிக்கையின்மை இதுவாகும்.

முன்னதாக 2018 ஆம் ஆண்டு மஞ்சள் மேலங்கி அணிந்து தொழிற்சங்கத்தினர் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் இறங்கிருந்தனர். அதன் போது மக்ரோன் மீதான நம்பிக்கையின்மை 23% சதவீதத்துக்கு வீழ்ச்சியடைந்திருந்தது. அதுவே அவர் பெற்ற மிக குறைந்த புள்ளியாக இருந்த நிலையில், தற்போது புதிய அரசாங்கம் அமைப்பதில் ஏற்பட்ட குழப்பங்களினால் இந்த புள்ளி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

***

இந்த கருத்துக்கணிப்பு ஒக்டோபர் 1 மற்றும் 2 ஆம் திகதிகளில் மேற்கொள்ளப்பட்டிருந்தது. 18 வயதுக்கு மேற்பட்ட 1,007 பேர் கருத்துக்கணிப்பில் பங்கேற்றுள்ளனர்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்