பிரான்சை தாக்க உள்ள சூறாவளி!
4 ஐப்பசி 2024 வெள்ளி 09:00 | பார்வைகள் : 4128
”L'ouragan "majeur" Kirk” என வானிலை அவதானிப்பு மையத்தால் குறிப்பிடப்படும், ‘கிர்க்’ என பெயரிடப்பட்ட சூறாவளி பிரான்சை தாக்க உள்ளது.
பலத்த காற்றும் இடியுடன் கூடிய பலத்த மழையும் பதிவாகும் எனவும் வானிலை நிலையம் எச்சரித்துள்ளது. இந்த ஒக்டோபர் மாதத்தின் இரண்டாவது வாரத்தில் இந்த சூறாவளி பிரான்சைக் கடக்கும் எனவும், ஐரோப்பாவின் பல நாடுகளில் அதன் தாக்கம் இருக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக வடமேற்கு கடற்கரையை அண்டிய பகுதிகளில் பெரும் சேதம் ஏற்படலாம் எனவும், இது 4 ஆம் கட்ட இயற்கை அனர்த்தம் என வகைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மணிக்கு 215 கி.மீ வேகத்தில் சூறாவளி வீசும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.