Paristamil Navigation Paristamil advert login

ஆப்கானிஸ்தான் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் திருமணம்

ஆப்கானிஸ்தான் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் திருமணம்

4 ஐப்பசி 2024 வெள்ளி 09:37 | பார்வைகள் : 3231


ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான ரஷித் கானுக்கு  திருமணம் நடைபெற்றுள்ளது. 

இந்த திருமண விழாவில் ஆப்கானிஸ்தான் வீரர்கள் பலர் நேரில் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

இது தொடர்பான வீடியோ மற்றும் படங்கள் வைரலாகி வருகின்றன.

இவர்களுடைய திருமணம் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் உள்ள ஓட்டலில் நடந்துள்ளது. ஓட்டலுக்கு வெளியே ஏராளமானோர் நடந்து கொண்டிருக்க துப்பாக்கியுடன் பலர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருப்பது வீடியோவில் பதிவாகியுள்ளது.

ஆப்கானிஸ்தான் அணியின் முகமது நபி "ஒரேயொரு கிங் கான் (King Khan) ஆன ரஷித் கானுக்கு திருமண வாழ்த்துக்கள். வாழ்நாள் முழுவதும் அன்பு, மகிழ்ச்சி நிறைந்திருக்க வாழ்த்துகள்" எனத் தெரிவித்துள்ளார்.

26 வயதாகும் ரஷித் கான் ஐந்து டெஸ்ட், 105 ஒருநாள் மற்றும் 93 டி20 போட்டிகளில் விளையாடிள்ளார். 

டெஸ்ட் போட்டியில் 34 விக்கெட்டுகளும், ஒருநாள் போட்டியில் 190 விக்கெட்டுகளும், டி20 போட்டியில் 152 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார்.

2015-ம் ஆண்டு முதன்முறையாக ஜிம்பாப்வே அணிக்கெதிராக டி20 போட்டியின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம் ஆனார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்