Paristamil Navigation Paristamil advert login

வேட்டையன் படத்தின் இடைவேளையில் விடாமுயற்சி டீசரா?

வேட்டையன் படத்தின் இடைவேளையில் விடாமுயற்சி டீசரா?

4 ஐப்பசி 2024 வெள்ளி 09:42 | பார்வைகள் : 4832


ரஜினி நடித்திருக்கும் வேட்டையன் படம் வருகிற 10ம் தேதி திரைக்கு வருகிறது. தற்போது இப்படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்னும் சில தினங்களில் டிக்கெட் முன்பதிவு தொடங்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று வெளியாகி உள்ள ஒரு செய்தியில், வேட்டையன் படத்தின் இடைவேளையின்போது அஜித் நடித்துள்ள விடாமுயற்சி படத்தின் டீசர் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. இது அஜித் ரசிகர்களுக்கு உற்சாக செய்தியாகி இருக்கிறது. அஜித் நடித்துள்ள விடாமுயற்சி படத்தையும் வேட்டையன் படத்தை தயாரித்திருக்கும் லைகா நிறுவனம் தான் தயாரித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வர்த்தக‌ விளம்பரங்கள்