நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம்.. 300,000 பேர் பங்கேற்பு..!

7 புரட்டாசி 2024 சனி 18:09 | பார்வைகள் : 7220
ஜனாதிபதி மக்ரோனுக்கு எதிராக நாடு முழுவதும் "coup de force" எனும் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது. இதில் 300,000 பேர் பங்கேற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் புதிய பிரதமராக Michel Barnier அறிவிக்கப்பட்டமை ஜனாதிபதி மக்ரோனின் தன்னிச்சையான முடிவு எனவும், இது நாட்டின் நலனுக்கு நல்லது இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டு இந்த ஆர்ப்பாட்டங்கள், பரிஸ், போர்து, நீஸ் போன்ற பல நகரங்களில் மேற்கொள்ளப்பட்டது.
தலைநகர் பரிசில் 26,000 பேர் கலந்துகொண்டதாக காவல்துறையினரும், தாம் 160,000 பேர் இருந்ததாக Insoumis கட்சியினரும் (ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்த கட்சி) தெரிவித்தனர்.
அதேவேளை, நாடு முழுவதும் 110,000 பேர் கலந்துகொண்டதாக காவல்துறையினரும், 300,000 பேர் கலந்துகொண்டதாக Insoumis கட்சியினரும் தெரிவித்தனர்.