இலங்கையில் 14ஆம் திகதியை விசேட தினமாக அறிவித்த தேர்தல்கள் ஆணைக்குழு!
9 புரட்டாசி 2024 திங்கள் 10:36 | பார்வைகள் : 2030
ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய விசேட தினமாக கருதி எதிர்வரும் 14ஆம் திகதி சனிக்கிழமை வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கொழும்பில் இன்று (09) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்காளர் அட்டை விநியோகப் பணிகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.
வாக்காளர்கள் அட்டைகள் எதிர்வரும் 14ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் வீடுகளுக்கு விநியோகிக்கப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.