Paristamil Navigation Paristamil advert login

ஒலிம்பிக் நிறைவுநாள் நிகழ்வில் பங்கேற்ற டொம் க்ரூஸ்.. - பெற்றுக்கொண்ட சம்பளம் எவ்வளவு தெரியுமா..??!!

ஒலிம்பிக் நிறைவுநாள் நிகழ்வில் பங்கேற்ற டொம் க்ரூஸ்.. - பெற்றுக்கொண்ட சம்பளம் எவ்வளவு தெரியுமா..??!!

12 புரட்டாசி 2024 வியாழன் 16:18 | பார்வைகள் : 3097


பரிஸ் 2024 ஒலிம்பிக் போட்டிகளின் நிறைவுநாள் நிகழ்வில் அமெரிக்காவின் பிரபல நடிகர் டொம் க்ரூஸ் கலந்துகொண்டிருந்தமை அறிந்ததே.

கட்டிடத்தின் கூரையில் இருந்து குதித்து ஒலிம்பிக் தீபத்தை பரிசில் இருந்து லொஸ் ஏஞ்சலஸ் நகருக்கு எடுத்துச் செல்வதாக ஒரு காட்சி படமாக்கப்பட்டு, அன்றைய நிகழ்வில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இந்த 15 நிமிட காட்சிக்காக டொம் க்ரூஸ் பெற்றுக்கொண்ட சம்பளம் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Mission Impossible திரைப்படங்களில் நடித்து பிரபலமான அவர், இந்த ஒலிம்பிக் காட்சிகளுக்காக நடிப்பதற்கு எந்த வித சம்பளமும் வாங்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. தனது ரசிகர்களுக்காக முற்றுமுழுவதாக இலவசமாகவே நடித்துக்கொடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்