பிரித்தானிய தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய ரஷ்யா
14 புரட்டாசி 2024 சனி 05:41 | பார்வைகள் : 1761
ரஷ்யாவிலிருந்து ஆறு பிரித்தானிய தூதரக அதிகாரிகளை வெளியேற்றியுள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்நிலையில், அது பழிக்குப் பழி வாங்கும் நடவடிக்கை என பிரித்தானியா விமர்சித்துள்ளது.
மாஸ்கோவிலிருக்கும் ஆறு பிரித்தானிய தூதரக அதிகாரிகள், உக்ரைனில் நிலவும் போர்ச்சூழலை தீவிரமாக்க உதவியதாக ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது.
அதற்கு ஆதாரமாக, ஆவணங்கள் ரஷ்ய உளவுத்துறைக்குக் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ள அந்நாடு, அதன்பேரிலேயே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
உளவு பார்த்ததாக குற்றம் சாட்டி, ஆறு பிரித்தானிய தூதரக அதிகாரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்துள்ளதாக தெரிவித்துள்ள ரஷ்யா, அவர்களை நாட்டை விட்டு வெளியேற்றியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், ரஷ்யாவின் குற்றச்சாட்டு ஆதாரமற்றது என்று பிரித்தானிய வெளியுறவு அலுவலக செய்தித்தொடர்பாளர் ஒருவர் கூறியுள்ளார்.
அத்துடன், மே மாதத்தில், பிரித்தானியா உளவு குற்றம் சாட்டி ரஷ்ய தூதரக அதிகாரி ஒருவரை வெளியேற்றியது. அதற்கு பழிக்குப் பழி வாங்கவே பிரித்தானிய தூதரக அதிகாரிகளை ரஷ்யா வெளியேற்றியுள்ளதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது.