இலங்கையில் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம்

14 புரட்டாசி 2024 சனி 10:25 | பார்வைகள் : 3702
இந்த வருடம் ஒக்டோபர் முதலாம் திகதி முதல் பல கட்டங்களாக வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
வாகன இறக்குமதி ஒக்டோபர் முதலாம் திகதி முதல் பல கட்டங்களாக மேற்கொள்ளப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.
இதன்படி, பொது போக்குவரத்து சேவைகளுக்காக பயன்படுத்தப்படும் வாகனங்களை முதலில் இறக்குமதி செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு டிசம்பர் 1ம் திகதி முதல் வர்த்தக மற்றும் சரக்கு வாகனங்களை இறக்குமதி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.