Paristamil Navigation Paristamil advert login

அமெரிக்காவில் இந்து கோவில் மீது தாக்குதல் - பரபரப்பு சம்பவம்

அமெரிக்காவில் இந்து கோவில் மீது தாக்குதல் - பரபரப்பு சம்பவம்

17 புரட்டாசி 2024 செவ்வாய் 10:29 | பார்வைகள் : 9014


அமெரிக்காவின் நியூயார்க்கில் மெல்வில்லே பகுதியில் சுவாமிநாராயண் கோவில் உள்ளது. இக்கோவில், அமெரிக்காவில் மிகப்பெரிய இந்து கோவில் மற்றும் உலகின் 2-வது மிகப்பெரிய கோவில் என சிறப்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் சுவாமிநாராயண் கோவிலில் மர்மநபர்கள் சிலர் புகுந்து சேதப்படுத்தி உள்ளனர். அதுமட்டுமல்லாது கோவிலுக்கு வெளியே உள்ள சாலைகள், பலகைகளில் எதிர்ப்பு வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன.


இதற்கு அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து தூதரகம் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,


'இது போன்ற செயலை ஏற்றுக்கொள்ள முடியாது. தாக்குதல் நடத்தியவர்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க அமெரிக்க அதிகாரிகளிடம் வலியுறுத்தி உள்ளோம்.

சமீப காலமாக இந்து கோவில்கள் மீது நடந்து வரும் தாக்குதல் குறித்து விரிவான விசாரணை மேற்கொள்ள வேண்டும்' என்றுகூறியுள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்