Paristamil Navigation Paristamil advert login

ரஷ்ய மக்களுக்கு புடின் விடுத்த வேண்டுகோள் -   பெரும் சர்ச்சை!

ரஷ்ய மக்களுக்கு புடின் விடுத்த வேண்டுகோள் -   பெரும் சர்ச்சை!

18 புரட்டாசி 2024 புதன் 08:35 | பார்வைகள் : 1685


ரஷ்யா நாட்டில் மக்கள் தொகை தொடர்ந்து குறைந்து வருவதால் வரும் காலங்களில் நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதனால், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அந்த நாட்டு மக்கள் அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். 

ரஷ்யாவில் குறைந்து வரும் பிறப்பு விகிதம் தொடர்பில் புதின் கவலை அடைந்துள்ளார்.

இது குறித்து அவர் தெரிவிக்கையில்,

உக்ரைனுடன் நடந்து வரும் போரின் காரணமாக நாட்டின் மக்கள் தொகை குறைந்துள்ளது.

இது தேசத்தின் எதிர்காலத்திற்கு பேரழிவு. வேலையில் மிகவும் பிசியாக இருப்பது சரியான காரணம் அல்ல. 

இனப்பெருக்கத்திற்கு வேலை ஒரு தடையாக இருக்கக்கூடாது.

வேலை செய்யும் இடத்தில் மதிய உணவு மற்றும் காபி இடைவெளியின் போது என நேரம் கிடைக்கும் போதெல்லாம் காதல் செய்து குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இவ்வாறு கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்