இளம் வயது பயனாளிகளை பாதுகாக்க இன்ஸ்டாகிராமில் புதிய தனியுரிமை நடவடிக்கை
18 புரட்டாசி 2024 புதன் 08:42 | பார்வைகள் : 872
இளம் வயது பயனாளர்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையை இன்ஸ்டாகிராமின் தாய் நிறுவனமான மெட்டா அறிவித்துள்ளது.
இன்ஸ்டாகிராமின் தாய் நிறுவனமான மெட்டா இளம் வயது பயனாளர்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான புதிய தனியுரிமை அமைப்புகளை அறிவித்துள்ளது.
இந்த மாற்றங்கள் தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கத்தின் வெளிப்பாட்டைக் குறைத்து, பெற்றோர்களுக்கு தங்கள் குழந்தைகளின் ஆன்லைன் நடவடிக்கைகள் மீது அதிக கட்டுப்பாட்டை வழங்கும் நோக்கம் கொண்டதாக உள்ளது.
அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளிலிருந்து தொடங்கி, 18 வயதிற்குட்பட்ட பயனாளர்களுக்கு சொந்தமான அனைத்து இன்ஸ்டாகிராம் கணக்குகளும் அடுத்த 60 நாட்களுக்குள் இளம் வயது கணக்குகளாக தானாக மாற்றப்படும்.
இந்த கணக்குகள் இயல்பாகவே கடுமையான தனியுரிமை அமைப்புகளை கொண்டிருக்கும்.
மேலும் பயனாளர்கள் தொடர்ந்து ஒரு மணி நேரம் பயன்படுத்திய பிறகு பயன்பாட்டிலிருந்து இடைவெளி எடுக்க நினைவூட்டல்கள் பெறுவார்கள்.
இளம் வயது பயனாளர்களை மேலும் பாதுகாக்க, இரவு 10 மணி முதல் 7 மணி வரை இன்ஸ்டாகிராம் கணக்குகளில் தூக்க முறை செயல்படுத்தப்படும், இது அறிவிப்புகளை மியூட் செய்து நேரடி செய்திகளுக்கு தானியங்கி பதில்களை அனுப்பும்.
அத்துடன் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் தொடர்புகளை கண்காணித்து பயன்பாட்டிற்கான வரம்புகளை அமைக்க அனுமதிக்கும் பெற்றோர் கட்டுப்பாடுகளும் கிடைக்கும்.
வயது வரம்புகளை மீறுவதற்கான சாத்தியத்தை மெட்டா ஒப்புக் கொண்டுள்ளது மற்றும் இளம் வயது கணக்குகளை தீவிரமாக அடையாளம் காண தொழில்நுட்பத்தை உருவாக்கி வருவது குறிப்பிடத்தக்கது.