Paristamil Navigation Paristamil advert login

பரிஸ் : தாக்குதலுக்கு இலக்கான இளைஞன் - பலி!!

பரிஸ் : தாக்குதலுக்கு இலக்கான இளைஞன் - பலி!!

29 ஐப்பசி 2024 செவ்வாய் 11:09 | பார்வைகள் : 2909


இளைஞன் ஒருவர் தாக்குதலுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைக்குட்படுத்தப்பட்ட இளைஞன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

பரிஸ் 13 ஆம் வட்டாரத்தில் இச்சம்பவம் நேற்று ஒக்டோபர் 28, திங்கட்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. மாலை 6 மணி அளவில் காவல்துறையினர் அழைக்கப்பட்டதை அடுத்து, rue Regnault வீதிக்கு காவல்துறையினர் விரைந்து சென்றனர். அங்கு இளைஞன் ஒருவன் மிக மோசமாக தாக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில், இரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார்.

உடனடியாக அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டார். 

ஆனால் சிகிச்சை பலனின்றி இரவு 8.40 மணி அளவில் அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. உடற்கூறு பரிசோதனைகளின் பின்னர் மேலதிக விபரங்கள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்