Paristamil Navigation Paristamil advert login

WhatsApp உள்ளிட்ட சமூக ஊடகங்கள் மூலம் மோசடி - இலங்கையர்களுக்கு எச்சரிக்கை

WhatsApp உள்ளிட்ட சமூக ஊடகங்கள் மூலம் மோசடி - இலங்கையர்களுக்கு எச்சரிக்கை

29 ஐப்பசி 2024 செவ்வாய் 14:17 | பார்வைகள் : 1349


வட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் மூலம் பகிரப்படும் போலி செய்திகள் அதிகரித்துள்ளமை குறித்து இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு (CERT) பொதுமக்களை எச்சரித்துள்ளது. 
 
வங்கிகள், வணிக நிறுவனங்கள் மற்றும் சர்வதேச அமைப்புகள் உள்ளிட்ட நம்பகமான நிறுவனங்களின் பெயரில், தனிநபர்களின் தனிப்பட்ட மற்றும் நிதியியல் தகவல்களை மோசடியாகப் பெறுவதற்கு போலியான செய்திகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. 
 
குறித்த செய்திகள் இணைய குற்றத்தில் ஈடுபடுவர்களால் சமூக ஊடக தளங்கள், போலி இணையத்தளங்கள், குறுஞ்செய்திகள் ஊடாக அனுப்பப்பட்டமை தொடர்பில் அவதானிக்கப்பட்டுள்ளதாக அந்த குழு கூறுகிறது. 
 
எனவே, இது போன்ற செய்திகள் குறித்து எச்சரிக்கையுடன் இருக்குமாறு இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு, பொதுமக்களை கோரியுள்ளது.