நாக சைதன்யா - சோபிதா விவாகரத்து?
30 ஐப்பசி 2024 புதன் 14:46 | பார்வைகள் : 1393
நாக சைதன்யா மற்றும் சோபிதா துலிபாலா திருமணம் இன்னும் சில நாட்களில் நடைபெற இருப்பதாக உள்ள நிலையில், அதற்குள் இவர்கள் இருவரும் விவாகரத்து செய்து விடுவார்கள் என ஜோதிடர் ஒருவர் கூறியுள்ளார். இந்த தகவலுக்கு பின்னர் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யா, நடிகை சமந்தாவை திருமணம் செய்து விவாகரத்து செய்துள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம், பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்த சோபிதா துளிபாலாவை காதலிப்பதாக தெரிவித்தார். இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்த நிலையில், இன்னும் சில நாட்களில் திருமணம் நடைபெற இருப்பதாகவும், திருமண ஏற்பாடுகள் விறுவிறுப்பாக சென்று கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், நாக சைதன்யா மற்றும் சோபிதா துலிபாலா ஆகிய இருவரும் 2027ஆம் ஆண்டு விவாகரத்து செய்வார்கள் என்றும், வேறொரு பெண்ணால் நாக சைதன்யா பெரும் சவால்கள் எதிர்கொள்வார் என்றும் பிரபல ஜோதிடர் ஒருவர் கூறியுள்ளார். அவரது இந்த கணிப்பு வீடியோ இணையதளங்களில் வெளியே வந்து வைரலாகி உள்ளது.
திருமணத்திற்கு முன்பே விவாகரத்து செய்வது குறித்து வீடியோ வெளியிடுவதா? என ரசிகர்கள் கோபமடைந்தனர். இது குறித்து காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தெலுங்கானா நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கின் விசாரணையில், இதுகுறித்து விசாரணை நடத்த மகளிர் ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விசாரணை அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தவுடன் ஜோதிடர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்படுகிறது.
இந்த நிலையில், இந்த வழக்கை சவாலாக எடுத்துக் கொள்வதாகவும், சட்ட ரீதியாக இந்த வழக்கை சந்திப்பேன் என்று ஜோதிடர் தெரிவித்துள்ளார்.