அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்.. பிரெஞ்சு மக்களின் சுவாரஷ்யமான கருத்துக்கணிப்பு!!
31 ஐப்பசி 2024 வியாழன் 12:09 | பார்வைகள் : 2724
அடுத்தவாரம் இடம்பெற உள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் பிரெஞ்சு மக்களிடம் மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்பில் பல சுவாரஷ்யமான முடிவுகள் வெளியாகியுள்ளன.
இந்த போட்டியில் மிக முக்கியமான வேட்பாளர்களாக கமலா ஹாரிஸ் மற்றும் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆகிய இருவரும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில், இவர்களில் அமெரிக்க ஜனாதிபதியாக யாரை விரும்புகின்றீர்கள் என Elabe நிறுவனம் கருத்துக்கணிப்பு ஒன்றை மேற்கொண்டது. அதன் முடிவுகள் நேற்று ஒக்டோபர் 30 ஆம் திகதி வெளியானது.
அதன்படி, 64% சதவீதமான பிரெஞ்சு மக்கள், கமலா ஹாரிஸ் ஜனாதிபதியாக வர விரும்புவதாக தெரிவித்துள்ளனர். வெறுமனே 13% சதவீதமானவர்கள் மட்டுமே டொனால்ட் ட்ரம்ப் ஜனாதிபதியாகுவதை விரும்புவதாகவும், ஏனைய 23% சதவீதமானர்கள் ‘கருத்து தெரிவிக்க விரும்பவில்லை’ எனவும் தெரிவித்தனர்.