வீதிகளைக் கடக்கும் தவளைகளுக்காக சுரங்கப்பாதை!
1 கார்த்திகை 2024 வெள்ளி 17:32 | பார்வைகள் : 2604
வீதிகளைக் கடக்கும் தவளைகள் வாகனங்களில் சிக்குண்டு கொல்லப்படுவதை தவிர்ப்பதற்காக சுரங்கப்பாதைகள் அமைக்கும் பணி ஒன்று இடம்பெற்று வருகிறது.
மத்திய பிரான்சான Centre-Val de Loire நகரில் இச்சம்பவம் இடம்பெற்று வருகிறது. அங்கு உலகில் மிக அரிதான தேரை இனப்பிரிவைச் சேர்ந்த வசிக்கிறது. வேகமாக அழிந்துவரும் இந்த தவளைகளைப் பாதுகாக்க குளங்களை தூர்வாருதல் உள்ளிட்ட பல பணிகள் முன்னதாக இடம்பெற்று வந்தன. இந்நிலையில், தற்போது வீதிகளின் கீழே சுரங்கப்பாதைகள் அமைக்கும் பணிகள் இடம்பெற்று வருகிறது.
520,000 யூரோக்கள் செலவில் கடந்த இரண்டு நாட்களாக அங்கு வீதிகளுக்கு கீழ் தோண்டப்பட்டு, அதில் சிமெந்தினால் சுரங்கங்கள் அமைக்கப்பட்டு வருகிறது.
அதேவேளை, இந்த பணிகள் இடம்பெற்று வரும் RD19 சாலை எதிர்வரும் டிசம்பர் 20 ஆம் திகதி வரை மூடப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.