Paristamil Navigation Paristamil advert login

திடீரென தீப்பிடித்த டெஸ்லா மகிழுந்து.. நால்வர் பலி!

திடீரென தீப்பிடித்த டெஸ்லா மகிழுந்து.. நால்வர் பலி!

13 ஐப்பசி 2024 ஞாயிறு 11:14 | பார்வைகள் : 3897


டெஸ்லா நிறுவனத்துக்குச் சொந்தமான மகிழுந்து ஒன்று தீப்பிடித்து எரிந்ததில், அதில் இருந்த நால்வர் பலியாகியுள்ளனர்.

மேற்கு பிரான்சின் Deux-Sèvres நகரில் இச்சம்பவம் நேற்று ஒக்டோபர் 12 ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது. மின்சாரத்தில் இயங்கும் டெஸ்லா மகிழுந்து ஒன்று இரவு 10.45 மணி அளவில் வீதியில் பயணித்துக்கொண்டிருந்த போது திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. 

மகிழுந்து அதிவேகமாக பயணித்ததாகவும், அதன் காரணமாகவே வெப்பமடைந்து தீப்பிடித்ததாகவும் முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. 

உயிரிழந்தவர்களின் சடலம் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்