Paristamil Navigation Paristamil advert login

பிக்பாஸ் ரஞ்சித் வாழ்க்கையின் மறுபக்கம் தெரியுமா...?

பிக்பாஸ் ரஞ்சித் வாழ்க்கையின்  மறுபக்கம்  தெரியுமா...?

13 ஐப்பசி 2024 ஞாயிறு 13:37 | பார்வைகள் : 1292


பிக்பாஸ் தமிழ் எட்டாவது சீசனில் கலந்துகொண்டுள்ள போட்டியாளர்களில் பிரபல நடிகர் ரஞ்சித்தும் ஒருவர். 90களில் வெளியான மறுமலர்ச்சி படம் மூலம் தமிழ் திரையுலகில் வில்லனாக அறிமுகமாகி பல்வேறு ஹிட் படங்களில் ஹீரோவாகவும் நடித்தவர் ரஞ்சித். நடிகரை தாண்டி வெற்றிகரமாக இயக்குனராகவும் வலம்வந்த ரஞ்சித் "பீஷ்மர்" என்கிற படத்தை இயக்கினார். தொடர்ந்து சீரியல் பக்கம் ஒதுங்கிய ரஞ்சித் சமீபத்தில், "கவுண்டம்பாளையம்" போன்ற படங்களை இயக்கி நடித்திருந்தார்.

 இந்தப் படம் தொடர்பாக சமீபகாலமாக தனது பேட்டிகளால் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர் ரஞ்சித், பிக்பாஸ் தமிழ் சீசன் 8 இல் போட்டியாளராக பங்கேற்றார். பிக்பாஸில் பங்கேற்ற பிறகு அவரின் இல்லற வாழ்க்கை குறித்து பலரும் பேசிவருகின்றனர். ரஞ்சித்தின் இல்லற வாழ்க்கை பலருக்கும் தெரிந்த கதைதான்... எனினும் சற்றே ஒரு ரீவைண்ட்.

"வள்ளி" என்ற படத்தில் அறிமுகம் ஆனவர் நடிகை பிரியா ராமன், "சூரியவம்சம்" உள்பட பல படங்களில் நடித்த அவர், "நேசம் புதுசு" என்கிற படத்தில் ரஞ்சித்துடன் ஜோடியாக நடித்தார். அப்போதே, இரண்டு பேருக்கும் இடையே காதல் மலர்ந்தது. காதலின் அடுத்தகட்டமாக திருமண வாழ்க்கையில் இணைந்தனர். 1999ம் ஆண்டு பெற்றோர்கள் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இந்த தம்பதிக்கு ஆதித்யா, ஆகாஷ் என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.
.
15 ஆண்டுகால இல்லற வாழ்க்கைக்கு பின்னர், இருவருக்குமிடையே கருத்து வேறுபாடுகள் எழ, 2014ல் முறையாக விவாகரத்துபெற்றனர். "கணவன்-மனைவி உறவில் இருந்து விடுபட்டாலும், நல்ல நண்பர்களாக இருப்போம். சிறந்த தோழன்- தோழியாக வாழ்ந்து காட்டுவோம்" என்று அறிவித்தபடி, இந்த ஜோடி பிரிந்தது.

இருவரும் பிரிந்த அதே ஆண்டில் சீரியல் நடிகை ராகசுதாவை ரஞ்சித் திருமணம் செய்தார். நடிகை ராகசுதா, நடிகை கே.ஆர்.விஜயாவின் சகோதரி கே.ஆர்.சாவித்ரியின் மகள் ஆவார். திருமணம் ஆன ஒரே ஆண்டில் ரஞ்சித் - ராகசுதா இடையே பிரிவு உண்டாக, இருவரும் பிரிந்தனர்.

இந்த பிரிவு நடந்த ஏழு ஆண்டுகளுக்கு பின் திடீர் ட்விஸ்ட்டாக ரஞ்சித் - பிரியா ராமன் இருவரும் மீண்டும் இணைந்தனர். விவகாரத்தை திரும்பப்பெற்ற இருவரும், 7 ஆண்டுகள் கழித்து, மீண்டும் தங்கள் திருமண நாளில் ஒன்றாக இணைந்ததாக போட்டோ வெளியிட்டு அறிவித்தனர். இதன்பின் இருவரும் சீரியலில் ஒன்றாக தோன்றியது என மகிழ்ச்சியாக வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். பிரியா ராமன் தான் தன்னை பிக்பாஸ் வீட்டுக்கு அனுப்பி வைத்ததாக பிக்பாஸ் அறிமுக நிகழ்ச்சியில் ரஞ்சித் வெளிப்படுத்தினார்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்