Paristamil Navigation Paristamil advert login

சூர்யாவின் 46வது படத்தை இயக்குவது இயக்குனர் நவீன்?

சூர்யாவின் 46வது படத்தை இயக்குவது இயக்குனர் நவீன்?

13 ஐப்பசி 2024 ஞாயிறு 13:56 | பார்வைகள் : 182


சூர்யா நடிக்க இருக்கும் 46வது திரைப்படத்தை இயக்கும் இயக்குனர் குறித்த தகவல் கசிந்துள்ளதை அடுத்து சூர்யா ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சூர்யா நடித்த 43 வது திரைப்படம் ஆன ’கங்குவா’ நவம்பர் 14ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த அவரது 44 ஆவது படத்தின் படப்பிடிப்பும் சமீபத்தில் முடிவடைந்தது.

இந்த நிலையில் சூர்யாவின் 45 வது திரைப்படத்தை ஆர்ஜே பாலாஜி இயக்க இருப்பதாக கூறப்படும் நிலையில் சூர்யாவின் 46 வது திரைப்படத்தை இயக்குனர் நவீன் இயக்க இருப்பதாக கூறப்படுகிறது.

கடந்த 2013 ஆம் ஆண்டு ஓவியா நடித்த ’மூடர்கூடம்’ என்ற படத்தை இயக்கிய நவீன் அதன்பிறகு விஜய் ஆண்டனி நடித்த ’அக்னி சிறகுகள்’ என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் ரிலீஸ் ஆகாமல் தாமதம் ஆகி வரும் நிலையில் சூர்யாவின் 46 வது படத்தை நவீன் இயக்குவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்