கட்டாய நாடுகடத்தலை அமுல்படுத்தியுள்ளது சுவிட்சர்லாந்து
14 ஐப்பசி 2024 திங்கள் 08:34 | பார்வைகள் : 2165
சுவிட்சர்லாந்து ஐந்து ஆண்டுகளுக்குப் பின், கட்டாய நாடுகடத்தலை மீண்டும் ஆரம்பித்துள்ளது.
இந்த தகவலை, புலம்பெயர்தலுக்கான சுவிஸ் மாகாணச் செயலகம் உறுதி செய்துள்ளது.
ஆப்கன் நாட்டவர்கள் இரண்டு பேர் அவர்களுடைய நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்பட்டதாக புலம்பெயர்தலுக்கான சுவிஸ் மாகாணச் செயலகம் தெரிவித்துள்ளது.
2019ஆம் ஆண்டுக்குப்பிறகு சுவிட்சர்லாந்து இப்படி கட்டாய நாடுகடத்தலை மேற்கொண்டுள்ளது இதுவே முதன்முறையாகும்.
அந்த இரண்டுபேரும், தங்கள் சொந்த நாட்டில் இறக்கிவிடப்பட்டதும், அவர்களுக்கு செலவுக்கு பணம் தேவைப்படும் என்பதால், ஆளுக்கு 500 சுவிஸ் ஃப்ராங்குகளைக் கொடுத்து அனுப்பியுள்ளனர் அதிகாரிகள்.
பயங்கர குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களான அவர்கள் இருவரையும் சுவிஸ் அதிகாரிகள் இஸ்தான்புல்லுக்குக் கொண்டு சென்று, அவர்களை ஆப்கானிஸ்தான் செல்லும் விமானத்தில் ஏற்றி அனுப்பிவிட்டு சுவிட்சர்லாந்துக்கு திரும்பியுள்ளார்கள்.