இலங்கை ரூபாவின் பெறுமதியில் மீண்டும் வீழ்ச்சி!
15 ஐப்பசி 2024 செவ்வாய் 06:59 | பார்வைகள் : 2109
நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று வீழ்ச்சியைப் பதிவுசெய்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி இன்று (15) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 289 ரூபாய் 17 சதம், விற்பனைப் பெறுமதி 298 ரூபாய் 17 சதம்.
ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 376 ரூபாய் 36 சதம், விற்பனைப் பெறுமதி 391 ரூபா 14 சதம்.
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 313 ரூபாய் 87 சதம், விற்பனைப் பெறுமதி 326 ரூபாய் 76 சதம்.
சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 332 ரூபாய் 80 சதம், விற்பனைப் பெறுமதி 348 ரூபாய் 49 சதம்.
கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 208 ரூபா 17 சதம், விற்பனைப் பெறுமதி 217 ரூபாய் 38 சதம்.
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 192 ரூபாய் 62 சதம், விற்பனைப் பெறுமதி 202 ரூபாய் 38 சதம்.
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 219 ரூபாய் 12 சதம், விற்பனைப் பெறுமதி 229 ரூபாய் 49 சதம்.
ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபாய் 92 சதம், விற்பனைப் பெறுமதி 2 ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது.