Paristamil Navigation Paristamil advert login

périphérique : பலனளிக்கும் 50 கி.மீ வேகக்குறைப்பு ..!!

périphérique : பலனளிக்கும் 50 கி.மீ வேகக்குறைப்பு ..!!

5 மார்கழி 2024 வியாழன் 09:00 | பார்வைகள் : 2143


கடந்த ஒக்டோபர் 1 ஆம் திகதி முதல் சுற்றுவட்ட வீதி (périphérique) -இன் அதிகபட்சமாக மணிக்கு 50 கி.மீ வேகமாக மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. 

ஒலி மாசடைவு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு என பல காரணங்களை அடுக்கி இந்த திட்டத்தினை அரசு நிறைவேற்றியிருந்தது. இரண்டு மாதங்களை தற்போது கடந்துள்ள நிலையில், இந்த வேகக்கட்டுப்பாடு பலனளிக்கிறதா எனும் கேள்வி எழுந்துள்ளது.

Porte d'Auteuil, 
Porte de Châtillon, 
Porte de Vincennes, 
Porte de Bagnolet - Porte des Lilas,
Porte Pouchet

ஆகிய ஐந்து இடங்களில் ஒலிமாசடைவையை கண்காணிக்கும் கருவிகள் பொருத்தப்பட்டு, அதனூடாக கண்காணிக்கப்பட்டதில் இந்த வேகக்குறைப்பு மிக நல்ல பலனளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகல் நேரங்களில் 1.7 டெசிபில்ஸ் அளவும், மாலை நேரங்களில் 1.9 டெஸிபில்ஸ் அளவும், இரவு வேளைகளில் 2.4 டெசிபில்ஸ் அளவு ஒலியும் பதிவாகுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சுற்றுவட்ட வீதியை அண்மித்து வசிக்கும் 500,000 பேரின் நலன்களை கருத்தில் கொண்டு இந்த வேகக்குறைப்பு கொண்டுவந்ததாக அரசு தெரிவித்திருந்தது.

எழுத்துரு விளம்பரங்கள்