மக்ரோனின் அரசாங்கம்… ‘அழைத்தாலும் செல்லப்போவதில்லை…’ - மரீன் லூ பென் காட்டம்!

11 மார்கழி 2024 புதன் 08:55 | பார்வைகள் : 10225
ஜனாதிபதி மக்ரோன் விரைவில் புதிய பிரதமரை அறிவிக்க வேண்டும். அதற்கான தயார்ப்படுத்தலை மக்ரோன் ஜனாதிபதி மேற்கொண்டுவருகிறார். அனைத்து கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களையும் அவர் தொடர்ச்சியாக சந்தித்து வருகிறார். நேற்று மாலை பல்வேறு கட்சித்தலைவர்களை எலிசே மாளிகையில் வைத்து சந்தித்தார்.
ஆனால் இதுவரை மரீன் லு பென்னின் Rassemblement national கட்சி சார்பில் இதுவரை எவரும் அழைக்கப்படவில்லை. இந்நிலையில், இன்று காலை France 2 தொலைக்காட்சியில் நேர்காணல் வழங்கிய மரீன் லு பென், “மக்ரோன் அழைத்தாலும் செல்லப்போவதில்லை” என தெரிவித்தார்.
“மக்ரோனின் அரசாங்கத்தில் எனக்கு எந்த வேலையும் இல்லை. அவர் என்னை பேச்சுவார்த்தைக்கு அழைத்தாலும் நான் செல்லப்போவதில்லை.” என அவர் தெரிவித்தார்.