Paristamil Navigation Paristamil advert login

சோம்ப்ஸ்-எலிசே : கத்தி மூலம் அச்சுறுத்தல் விடுத்த ஒருவர் கைது!

சோம்ப்ஸ்-எலிசே : கத்தி மூலம் அச்சுறுத்தல் விடுத்த ஒருவர் கைது!

18 கார்த்திகை 2024 திங்கள் 11:43 | பார்வைகள் : 6164


நபர் ஒருவர் வீதியில் பயணித்தவர்களை கத்தி மூலம் அச்சுறுத்தல் விடுத்த நிலையில், காவல்துறையினரால் உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று நவம்பர் 17, ஞாயிற்றுக்கிழமை இரவு இச்சம்பவம் Champs-Élysées பகுதிkகு மிக அருகே  Avenue Franklin-Roosevelt வீதியில் இடம்பெற்றுள்ளது. ஸ்பானிஷ் மொழி பேசும் ஒருவர் இரவு 10 மணி அளவில், வீதியில் சென்றுகொண்டிருந்தவர்களை கத்தி ஒன்றினை வைத்துக்கொண்டு அச்சுறுத்திக்கொண்டிருந்துள்ளார்.

அவரிடம் 20 செ.மீ நீளமுடைய சமையலறைக் கத்தி இருந்ததாகவும், அவர் உடனடியாக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் எவரும் காயமடையவில்லை என தெரிவிக்கப்படுகிறது. 

கைது செய்யப்பட்ட நபர் ஒரு வீடற்றவர் (SDF) என தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்