Paristamil Navigation Paristamil advert login

அரபிக்கடலில் 500 கிலோ போதைப்பொருள் சிக்கியது!

அரபிக்கடலில் 500 கிலோ போதைப்பொருள் சிக்கியது!

29 கார்த்திகை 2024 வெள்ளி 05:47 | பார்வைகள் : 1766


அரபிக்கடலில் 2 படகுகளில் இருந்து 500 கிலோ மெத்தபெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அரபிக்கடலில் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக இந்திய கடற்படை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனால் அப்பகுதியில் இந்தியா மற்றும் இலங்கை கடற்படை அதிகாரிகள் இணைந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, அவர்கள் இரண்டு படகுகளில் போதைப்பொருட்கள் கடத்தி செல்வதை கண்டுபிடித்தனர்.

அந்த படகுகளை சுற்றி வளைத்த, கடற்படையினர் அவர்களிடம் இருந்து 500 கிலோ மெத்தபெட்டமைன் போதைப் பொருட்களை பறிமுதல் செய்தனர். படகில் இருந்த நபர்களை பிடித்து கடற்படை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இரண்டு படகுகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள் இலங்கை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. இது குறித்து தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்