ஐபிஎல் ஏலத்தில் 13 வயதில் ரூ 1.10 கோடிக்கு ஏலம் போன சிறுவன்: யார் இந்த வைபவ் சூர்யவன்ஷி?
29 கார்த்திகை 2024 வெள்ளி 08:34 | பார்வைகள் : 226
2025ம் ஆண்டுக்கான ஐபிஎல் ஏலத்தில் வைபவ் சூர்யவன்ஷி என்ற 13 வயது சிறுவன் ரூ.1.10 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டு வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
13 வயதில் ஐபிஎல் ஏலத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் ரூ.1.10 கோடிக்கு விற்பனையான வைபவ் சூர்யவன்ஷி, இந்திய கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்துள்ளார்.
வைபவ்வின் திறமையை கண்டு வியந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, அவரை தங்களது அணியில் சேர்க்க தீவிர முயற்சி மேற்கொண்டது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட், வைபவ்வின் திறமையைப் பாராட்டி, அவர் இன்னும் பெரிய வீரராக வருவார் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஆக்ரோஷமான ஆட்டம் மற்றும் எதிர்காலத்தில் வளரக்கூடிய திறன் ஆகியவை ராகுலை கவர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
பள்ளிக்கூடத்தில் படிக்கும் வைபவ், தனது வயதுக்கு மீறிய கிரிக்கெட் திறமையால் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.
இந்திய யு19 அணியில் இடம்பெற்றுள்ள அவர், ரஞ்சி டிராபியில் பீகார் அணிக்காகவும் விளையாடி வருகிறார்.
இடது கை பேட்ஸ்மேனான வைபவ், தனது இளம் வயதிலேயே பல சர்வதேச போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.
வைபவ் இன்னும் பள்ளியில் படித்துக் கொண்டு இருப்பதால், அவரை ஐபிஎல் போன்ற தொழில்முறை கிரிக்கெட்டில் விளையாட அனுமதிப்பது சரியா என்ற கேள்வி எழுந்துள்ளது.