ரஷ்ய அதிபர் புடினின் “Oreshnik” ஏவுகணை திட்டம்
29 கார்த்திகை 2024 வெள்ளி 09:45 | பார்வைகள் : 1299
உக்ரைனுக்கு எதிராக “Oreshnik” ஏவுகணைகளை பயன்படுத்த ரஷ்ய ஜனாதிபதி புடின் உத்தரவிட்டுள்ளார்.
மேற்கத்திய ஆயுதங்களை ரஷ்யாவின் உள் பகுதியில் உக்ரைன் பயன்படுத்த தொடங்கியதில் இருந்து உக்ரைன்-ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன.
ரஷ்ய ஜனாதிபதி புடின் அணு ஆயுதங்களை தயார் நிலையில் வைத்திருக்க உத்தரவிட்டதுடன், பதுங்கு குழிகளையும் தயார் நிலையில் வைத்திருக்க உத்தரவிட்டார்.
இந்நிலையில் CSTO உச்சி மாநாட்டில் பேசிய ரஷ்ய ஜனாதிபதி புடின், பொதுப் பணியாளர்கள் மற்றும் பாதுகாப்பு அமைச்சகம் ஆகிய உக்ரைனின் முடிவெடுக்கும் மையங்களை ரஷ்யாவின் “Oreshnik” ஏவுகணைகள் குறி வைக்கும் என அறிவித்துள்ளார்.
மேலும் ரஷ்யாவிடம் பல “Oreshnik” ஏவுகணைகள் தயார் நிலையில் இருப்பதாகவும், அவற்றின் கூடுதல் உற்பத்தியை தொடங்கி இருப்பதாகவும் புடின் தன்னுடைய அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
புடினின் “Oreshnik” ஏவுகணைகள் பயன்பாடு குறித்த அறிக்கைக்கு பதிலளித்துள்ள உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, போரை முடிவுக்கு கொண்டு வர டிரம்ப் எடுத்து வரும் முயற்சிகளை குறைமதிப்பீடு செய்வே உக்ரைன் மீது Oreshnik” ஏவுகணைகளை புடின் பயன்படுத்துகிறார் என தெரிவித்துள்ளார்.
விரைவில் பதவியேற்க இருக்கும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் போர் நிறுத்த முயற்சிகளை நாசப்படுத்துவதற்காக மட்டுமே இந்த அறிவிப்பை புடின் அறிவித்து இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.