WhatsApp-யின் புதிய அப்டேட் - இனி முழு ஸ்டிக்கர் தொகுப்பையும் பகிர முடியும்
30 கார்த்திகை 2024 சனி 08:28 | பார்வைகள் : 127
நாம் அனைவரும் வாட்ஸ்அப்பை தினமும் பயன்படுத்தி, குடும்பம், நண்பர்கள், வேலை என அனைத்திலும் பயன்படுத்தி தங்களுடைய வாழ்க்கை மேம்படுத்தி வருகிறோம்.
இத்தகைய வசதியை தரும் வாட்ஸ் அப்பில் உரையாடல்களை மேலும் சுவாரஸ்சியமாக்கும் வகையில், வாட்ஸ்அப் ஸ்டிக்கர்களை பகிர்வதற்கான புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த புதிய அம்சத்தின் மூலம் உங்களுக்கு பிடித்த ஸ்டிக்கர்களை தனித்தனியாக தேர்ந்தெடுத்து அனுப்ப வேண்டிய அவசியமில்லை.
அதாவது, முழு ஸ்டிக்கர் பேக்கையும் ஒரே கிளிக்கில் உங்கள் நண்பர்களுடன் பகிரலாம்.
அவர்களும் இந்த பேக்கை தங்களது வாட்ஸ்அப் கணக்கில் எளிதாக சேர்த்துக் கொள்ளலாம்.
உங்கள் வாட்ஸ்அப் செயலியை Android 2.24.25.2 அல்லது அதற்கு மேற்பட்ட பதிப்பிற்கு புதுப்பிக்கவும்.
ஸ்டிக்கர் ஸ்டோரில், பகிர விரும்பும் பேக்கைத் தேர்ந்தெடுத்து, மூன்று புள்ளிகளை கிளிக் செய்யவும்.
தோன்றும் பட்டியலில் இருந்து, உங்கள் நண்பர்களைத் தேர்ந்தெடுத்து ஸ்டிக்கர் பேக்கை அனுப்பவும்.
தற்போது இந்த அம்சம் வாட்ஸ்அப்பில் உருவாக்கப்பட்ட ஸ்டிக்கர்களுக்கு மட்டுமே பொருந்தும்.
ஆனால் விரைவில், மற்ற ஆப்களில் உருவாக்கப்பட்ட ஸ்டிக்கர்களையும் பகிரலாம் என்றும் கூறப்படுகிறது.