Paristamil Navigation Paristamil advert login

Val-d'Oise : சூதாட்டத்தில் ஈடுபட்ட ஒருவர் சுட்டுக்கொலை!

Val-d'Oise : சூதாட்டத்தில் ஈடுபட்ட ஒருவர் சுட்டுக்கொலை!

30 கார்த்திகை 2024 சனி 15:18 | பார்வைகள் : 11789


சட்டவிரோத சூதாட்டத்தில் ஈடுபட்ட ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். நேற்று நவம்பர் 29 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இச்சம்பவம் Sannois (Val-d'Oise) நகரில் இடம்பெற்றுள்ளது.

27 வயதுடைய ஒருவரே சுட்டுக்கொல்லப்பட்டதாகவும், குறித்த நபர் அவரது வீட்டில் வைத்து சட்டவிரோதமாக சூதாட்டத்தில் ஈடுபட்டதாகவும், இவரால் பலர் பணத்தை இழக்க நேர்ந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் அவர் நேற்று மாலை சுட்டுக்கொல்லப்பட்டு, உயிரிழந்த நிலையில் அவரது வீட்டில் இருந்து மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலையில் துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளதாகவும், சம்பவ இடத்திலேயே அவர் பலியானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

வர்த்தக‌ விளம்பரங்கள்