சோம்ப்ஸ்-எலிசே அருகே கொள்ளை.. சேதம் 200,000 யூரோக்கள்!!
11 தை 2025 சனி 09:29 | பார்வைகள் : 642
சோம்ப்ஸ்-எலிசேக்கு அருகே உள்ள கடை ஒன்று ,கொள்ளையிடப்பட்டுள்ளது. மொத்தமாக 200,000 யூரோக்கள் பெறுமதியுள்ள பொருட்கள் திருடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
பரிஸ் 8 ஆம் வட்டாரத்தின் Rue Marignan வீதியில் உள்ள கடை ஒன்றிலேயே ஜனவரி 9 ஆம் திகதி வியாழக்கிழமை இக்கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. அங்குள்ள கடை ஒன்றுக்குள் முகமூடி அணிந்து ஆயுதங்களுடன் உள் நுழைந்த கொள்ளையர்கள் நால்வர், கடையின் ஊழியர்களை மிரட்டி கடையினை கொள்ளையிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இக்கொள்ளைச் சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.