Paristamil Navigation Paristamil advert login

கர்ப்பமாக இருக்கும் போது தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்

கர்ப்பமாக இருக்கும் போது தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்

1 தை 2023 ஞாயிறு 17:00 | பார்வைகள் : 9275


 ஒவ்வொரு பெண்ணும் கர்ப்பம் அடைந்து ஒரு குழந்தையை பெற்று எடுத்தால் தான் முழுமை பெறுகிறாள். ஆனால் அது லேசுபட்ட விஷயமல்ல. கருவுற்று ஒரு குழந்தையை பெற்று எடுப்பதற்குள் ஒரு பெண் படும்பாடு கொஞ்ச நஞ்சமல்ல. கர்ப்ப காலத்தில் ஒரு பெண் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் பல உள்ளன. அவைகளை எல்லாம் ஒரே பட்டியலில் வகைப்படுத்தி விட முடியாது. ஆகவே அவைகளில் முக்கியமான சிலவற்றை உங்களுக்காக விளக்கியுள்ளோம். 

 
அவைகளை தெரிந்து கொண்டால், கர்ப்ப காலத்தில் பெரிதும் உதவியாக இருக்கும். மேலும் இதனால் உடலில் ஏற்படும் மாற்றங்களை கண்டு உங்களுக்கே வியப்பு ஏற்படும். ஆனால் அவைகளை கண்டு பயப்பட தேவையில்லை. அவைகளில் பலவகைகள் சாதாரண மாற்றங்களே. இதனைப் பற்றி மேலும் அறிய விலாவரியாக படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
 
கர்ப்ப காலத்தில் குழந்தைக்கு போதுமான நீர்ச்சத்து கிடைக்க அதிகமாக தண்ணீர் குடித்தாக வேண்டும். அப்படி அதிக அளவில் நீரைக் குடிப்பதனால், தண்ணீரை பார்த்தாலே அலுப்புத் தட்டிவிடும். இது கர்ப்ப காலத்தில் நடக்கும் மாற்றங்களில் பொதுவானது. மேலும் ஓரிரு மாதங்கள் சென்ற பின் தண்ணீரை பார்த்தாலே வெறுப்பு ஏற்படும். அதனால் இங்கு கொடுத்திருப்பதை முயற்சி செய்து பாருங்கள். அது என்னவென்றால், உங்களுக்கு பிடித்த பானத்தை குளிர் சாதனப் பெட்டியில் உறைய வைத்து, ஐஸ் கட்டிகளாக மாற்றுங்கள். பின் அதனை குடிக்கும் தண்ணீரில் கலந்து பின் பருகுங்கள். இது உங்களுக்கு தண்ணீரைக் கண்டால் ஏற்படுத்தும் புரட்டலை கூட தடுத்து நிறுத்தும். மேலும் குழந்தைக்கு பால் கொடுக்கும் போது கூட இதனை முயற்சி செய்து பாருங்கள்.
 
அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பாமல், இயற்கை முறையில் பிரசவிக்க ஆசைப்பட்டால், அதற்கு தயார்படுத்திக் கொள்ள சில எளிய முறைகளை பின்பற்றினாலே போதுமானது. கர்ப்பம் தரித்து 32 வாரங்கள் அடைந்ததும், குழந்தை வெளியேறும் இடத்தில் ஒவ்வொரு நாள் இரவும் பாதாம் எண்ணெயை தடவுங்கள். பிரசவத்திற்கு முன் இப்படி செய்வதால், அதிக வலி இல்லாமல், தசைகள் அதிகமாக கிழியாமல் சுகப்பிரசவம் ஏற்படும் என்று ஆய்வுகள் கூறுகிறது.
 
கர்ப்ப காலம், குறட்டை விடச் செய்யும் என்பதை கேட்க ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் அது தான் உண்மை. கர்ப்பமாக இருக்கும் நேரத்தில், உடல் மென்மையாக மாறி வீக்கம் அடையும்; அதில் பாதங்களும் அடங்கும். அதனால் உங்கள் சுவாச குழாய்கள் குறட்டை வருவதை தடுத்து நிறுத்தாது. ஆகவே உங்கள் கணவருக்கு முன்னதாகவே இதற்கான எச்சரிக்கையை விடுங்கள். உங்களுக்கே உங்கள் குறட்டையை தாங்க முடியவில்லை என்றால், உங்கள் மருத்துவரை அணுகி அதை தடுக்க முடியுமா என்பதை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.
 
கர்ப்ப காலத்தில் முதுகு வலி மற்றும் இதர உடல்நல பிரச்சனைகளுக்கு, தண்டெலும்பு நோய்களைக் குணப்படுத்தும் மருத்துவரை சீரான முறையில் சந்தியுங்கள். ஒட்டுமொத்த உடல் நலத்தை காக்கவும், வலியை நீக்கவும், முதுகு தண்டை எப்படி சீர்படுத்துவது என்பது அவ்வகை மருத்துவர்களுக்கு தெரியும். மேலும் அவர்களை சந்திக்கும் செலவுகளை மருத்துவ காப்பீடு மூலமாக திரும்பி பெற்றுக் கொள்ளலாம்.
 
தாய்மை அடைய போகும் பெண்களே, தலைமுடி பராமரிப்பு பற்றி உங்களுக்கு சொல்லப் போகும் அறிவுரை முக்கியமான ஒன்றாகும். குழந்தை பிறக்கப் போகும் சில வாரங்களுக்கு முன், குறைந்த அளவில் தலைமுடியை வெட்டுங்கள். இதனால் குழந்தை பிறந்த பின், கூந்தலைப் பராமரிக்க உங்களுக்கு போதிய நேரமும் சக்தியும் கிடைக்கும்.
 
கர்ப்பமாக இருக்கும் ஒரே காரணத்திற்காக சுறுசுறுப்பாக இருக்கக்கூடாது என்றில்லை. செய்ய வேண்டிய உடற்பயிற்சியை செய்து, சுறுசுறுப்பாக இருந்தால், பிரசவ காலத்தில் ஆரோக்கியமாக இருக்கலாம். பிரசவம் நடக்கும் கடைசி சில வாரங்களுக்கு முன், உங்களால் நடக்க மட்டுமே முடியும். ஆனால் நடை கொடுத்தால் சுகப் பிரசவம் நடப்பதால், அதில் ஒன்றும் தவறில்லை.
 
பிரச்சனை இல்லாமல் தாய்ப்பால் சுரக்க இதோ ஒரு டிப்ஸ். குழந்தை பிறந்த பின்பு கர்ப்ப காலத்தில் நீங்கள் உண்ட அதே உணவுகளை, பிரசவத்திற்கு பின்னும் தொடருங்கள். அது கஷ்டமாக தான் இருக்கும். முக்கியமாக உங்களுக்கு பிடிக்காத உணவுகளை உண்ணும் போது, இந்த கஷ்டங்களை அனுபவிக்கலாம். 
 
அதிலும் உடல் வெப்பம் அடையாமல் இருக்க, உங்களுக்கு பிடித்த உணவை எல்லாம் உண்ணாமல் இருந்திருக்கலாம். இவ்வகை உணவுகளை மெதுவாக சேர்க்க ஆரம்பியுங்கள். குறிப்பாக, குழந்தைக்கு வயிற்று பிரச்சனை இல்லை என்றால் மட்டும் அதனை தொடரலாம். ஒவ்வொரு பிரசவமும் மாறுபடும். மேலும் ஒவ்வொரு தாயும் ஒருவருக்கொருவர் வேறுபடுவர். உங்கள் கர்ப்ப காலம் அதிகரிக்க அதிகரிக்க, அதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்