Paristamil Navigation Paristamil advert login

இஸ்ரேலுக்கு ஆயுத விற்பனைக்கு முன்மொழிந்துள்ள அமெரிக்கா

இஸ்ரேலுக்கு ஆயுத விற்பனைக்கு  முன்மொழிந்துள்ள அமெரிக்கா

5 தை 2025 ஞாயிறு 14:33 | பார்வைகள் : 1235


அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், பதவி விலகுவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன் இஸ்ரேலுக்கு 08 பில்லியன் டொலர் ஆயுத விற்பனையை முன்மொழிந்துள்ளார்.

இஸ்ரேலியப் படைகள் 04-01-2025 சனிக்கிழமை காசா பகுதி முழுவதும் மேற்கொண்ட சுமார் 30 தாக்குதல்களில் 70 பலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர்.

குழந்தைகள் உட்பட பலர் உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் மற்றும் மீட்பு பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

காசாவில் அதிகரித்து வரும் இறப்பு எண்ணிக்கை பற்றிய பரவலான விமர்சனங்களை புறக்கணித்து, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், பதவி விலகுவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு, இஸ்ரேலுக்கு 08 பில்லியன் டொலர் ஆயுத விற்பனையை முன்மொழிந்துள்ளார்.

இஸ்ரேல் – ஹமாஸ் மோதல் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக நீடித்துள்ள நிலையில் இதுவரை 45,658 பலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதுடன் 108,583 பேர் காயமடைந்துள்ளன.

 

எழுத்துரு விளம்பரங்கள்