சுவிட்சர்லாந்தில் உறை பனிமழையால் திணறும் மக்கள்

6 தை 2025 திங்கள் 04:55 | பார்வைகள் : 7773
சுவிட்ஸ்சர்லாந்தில் 04-01-2025 மாலை தொடக்கம் பெய்த உறைபனி மழையினால் பெருமளவில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
ஏங்கல்பெர்க்கில் கறுப்பு பனிக்கட்டிகளால் மிகவும் மோசமான நிலை ஏற்பட்டுள்ளது.
பாசல் கறுப்பு பனிக்கட்டிகளால், வீதிகள் மற்றும் பாதைகளில் வழுக்கும் அபாயம் உள்ளது. உறைபனி மழையினால், மேல் பாசல் பகுதியில் பனி சறுக்கு நிலையை உருவாக்கியுள்ளது.
A1/A3 இல் பேடன் நோக்கி பயணித்த ஒருவர், மோட்டார் பாதையின் நிலைமைகள் மிகவும் மோசமாக உள்ளது என்றும், நான் இதுவரை கண்டிராதளவுக்கு பனிப்பொழிவு அதிகமாக உள்ளது என்றும், வாகனம் ஓட்டுவது கிட்டத்தட்ட சாத்தியமற்றது என்றும் தெரிவித்துள்ளார்.
பெர்ன் கறுப்பு பனி காரணமாக, பெர்னில் ட்ராம் லைன் 6 இன் செயல்பாடு தடைசெய்யப்பட்டது. அத்துடன் ட்ராம் போக்குவரத்தில் தாமதங்கள் மற்றும் ரத்து இருக்கும் என அறிவிக்கப்பட்டது. பேருந்து சேவைகளும் மட்டுப்படுத்தப்பட்டிருந்தன.
Basel-Landschaft முழு பிராந்தியத்திற்கும் ’Alertswiss’ எச்சரிக்கையை வெளியிட்டது.
வீதிகள் மற்றும் நடைபாதைகளில் பனிக்கட்டிகளால் பெரும் ஆபத்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வழுக்கும் வீதிகள் காரணமாக, விபத்துக்கள் ஏற்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1