Paristamil Navigation Paristamil advert login

அமெரிக்காவில் ஏழு மாநிலங்களில் அவசரகால நிலை பிரகடனம்

அமெரிக்காவில்  ஏழு மாநிலங்களில் அவசரகால நிலை பிரகடனம்

6 தை 2025 திங்கள் 16:11 | பார்வைகள் : 889


அமெரிக்காவில் 30க்கும் மேற்பட்ட மாநிலங்களில் 6 கோடி பேர் கடுமையான பனிப்பொழிவு மற்றும் குளிரினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், ஏழு மாநிலங்களுக்கு அவரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

பல பகுதிகளில் மழை, பனி, பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய மழை பொழிந்த வண்ணம் உள்ளது.

ஆர்கன்சாஸ் மற்றும் டெக்சாஸ் போன்ற பிற மாநிலங்கள் சூறாவளி கண்காணிப்பில் உள்ளன.

ஆயிரக்கணக்கான விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன, பல பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதோடு, வீதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை  கன்சாஸ் மற்றும் மிசோரி ஆகிய பகுதிகள்  மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. அங்கு சில இடங்களில் சுமார் ஒரு அடிக்கு (30 செமீ) பனி பொழிந்து காணப்பட்டுள்ளது.

இதனை அடுத்து, கன்சாஸ் மற்றும் மிசோரி, கென்டக்கி, வேர்ஜீனியா, மேற்கு வேர்ஜீனியா, ஆர்கன்சாஸ் மற்றும் நியூ ஜெர்சி ஆகிய பகுதிகளுக்கு அவரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

திங்கட்கிழமை காலை வேர்ஜீனியா, மேரிலாந்து, வொஷிங்டன் டிசி மற்றும் டெலாவேர் ஆகிய பகுதிகளுடன் கிழக்கு கடற்கரையை நோக்கி புயல் நகரத் தொடங்கியுள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்