உக்ரைனின் முக்கிய நகரமாக விளங்கிய குராகோவை கைப்பற்றிய ரஷ்யா!
6 தை 2025 திங்கள் 16:29 | பார்வைகள் : 1237
உக்ரைனின் முக்கிய நகரமாக விளங்கிய குராகோவை கைப்பற்றிவிட்டதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உக்ரைனின் கிழக்குப் பகுதியில் உள்ள குராகோவ் என்ற நகரை பிடிக்க ரஷ்ய துருப்புக்கள் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக போர் இடம்பெற்று வருகின்றது.
ஏற்கனவே உக்ரைனின் டொனேட்ஸ்க் பிராந்தியத்தை கைப்பற்றிய நிலையில் தற்போது ஒரு நகரம் மேலும் சேர்ந்துள்ளது எனக் குறிப்பிட்டுள்ளது.
ஆனால் உக்ரைன் இது தொடர்பாக எந்த தகவலும் தெரிவிக்கவில்லை.
இதற்கிடையே தங்கள் நாட்டின் குர்ஸ்க் எல்லையில் உக்ரைன் ராணுவம் புதிய தாக்குதலை தொடங்கியுள்ளது என ரஷ்யா தெரிவித்திருந்தது. இதை அறிவித்த ஓரிரு நாளில் உக்ரைன் நகரை கைப்பற்றியதாக தெரிவித்துள்ளது.