Paristamil Navigation Paristamil advert login

வயோதிபர்களை இலக்கு வைக்கும் ”Boomer trap” மோசடி! - அவதானம்..!!

வயோதிபர்களை இலக்கு வைக்கும் ”Boomer trap” மோசடி! - அவதானம்..!!

16 மாசி 2025 ஞாயிறு 09:00 | பார்வைகள் : 2143


வயோதிபர்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் ஒரு புதிய மோசடி குறித்து காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மோசடிக்காரர்கள் ‘செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி உருவாக்கும்’ சில புகைப்படங்களால் வயோதிபர்கள் எளிதில் ஏமாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

“Boomer trap” எனப்படும் இந்த மோசடி, சமூகவலைத்தளங்களூடாக மேற்கொள்ளப்படுகிறது. முதலில் செயற்கை நுண்ணறிவு மூலம் (A.I) உருவாக்கப்பட்டும் அழகான பெண்களின் புகைப்படங்களை சமூகவலைத்தளத்தில் பதிவேற்றுகின்றனர். பின்னர் அதனை உண்மை என நம்பி கருத்துக்கள் எழுதும் கணக்காளர்களை தேடிப்பிடித்து, அவர்களை ‘இன்பொக்ஸ்’ மூலம் தொடர்புகொள்கிறார்கள்.

அதன் பின்னர் தொலைபேசி இலக்கங்களை பகிர்ந்துகொண்டு, தனிப்பட்ட தகல்களை பெற்றுக்கொண்டு பணமும் பெறுகிறார்கள் என தெரிவிக்கப்படுகிறது.

அண்மையில் பிரபல நடிகர் Brad Pitt இன் புகைப்படத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட போலியான கணக்கினை நம்பி பெண் ஒருவர் 830,000 யூரோக்களை இழந்த சம்பவம் இணையம் எங்கும் வைரலாக பரவியிருந்தது.

Brad Pitt இன் முகத்தை வைத்துக்கொண்டு தனிப்பட்ட புகைப்படங்களை உருவாக்கி Anne எனும் பெண்ணை நம்ப வைத்து அவரது கணக்கில் இருந்து பணத்தினை சுருட்டியுள்ளனர்.

அதை அடுத்தே இந்த மோசடிக்கார்களை நம்ப வேண்டாம் எனவும், இணையத்தில் பழகும் ஒருவரை நம்பி பணம் கொடுக்க வேண்டாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்