libération de Colmar : ஜனாதிபதி மக்ரோன் அஞ்சலி செலுத்தினார்!!

2 மாசி 2025 ஞாயிறு 17:24 | பார்வைகள் : 3851
libération de Colmar விடுதலையின் 80 ஆவது ஆண்டு நினைவுநாள் இன்று பெப்ரவரி 2 ஆம் திகதி கொண்டாடப்பட்டது.
Colmar (Haut-Rhin) மாவட்டத்தில் இடம்பெற்ற இந்த அஞ்சலி நிகழ்வில் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் கலந்துகொண்டார். அவருடன் Colmar நகர முதல்வர் உட்பட மேலும் பலர் கலந்துகொண்டனர்.
இரண்டாம் உலகப்போர் சமையத்தில் Colmar நகரை நாசிப்படையினர் தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர். 'Poche de Colmar' என சொல்லப்பட்டும் நடவடிக்கை ஒன்றை ஜெர்மனியின் நாசிப்படையினர் மேற்கொண்டிருந்தனர். அந்த நடவடிக்கையை பிரெஞ்சு இராணுவத்தினர் முறியடித்து 'பெப்ரவரி 2, 1945' அன்று விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.
அதன் 80 ஆவது ஆண்டு நினைவுநாளே இன்றைய தினம் கொண்டாடப்பட்டது. ஜனாதிபதி மக்ரோன் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினார்.