Paristamil Navigation Paristamil advert login

ஜனாதிபதி புடினை விமர்சித்த ரஷ்ய பாடகர் மர்ம மரணம்

ஜனாதிபதி புடினை விமர்சித்த ரஷ்ய பாடகர் மர்ம மரணம்

9 மாசி 2025 ஞாயிறு 02:30 | பார்வைகள் : 2005


உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததைக் கண்டிக்கும் வகையில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை 'முட்டாள்' என விமர்சித்த ரஷ்ய பாடகர் தனது வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

ரஷ்ய இசைக்கலைஞரும் வானொலி தொகுப்பாளருமான 58 வயதான வாடிம் ஸ்ட்ரோய்கின் என்பவரே இவ்வாறு உயிரிழந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த இவர் கடந்த புதன்கிழமை காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது ஜன்னலிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்ததாகக் கூறப்படுகின்றது.

மேலும் உக்ரைன் இராணுவத்தை ஆதரித்தது மற்றும் பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பில் இருந்தது ஆகிய குற்றங்களுக்காக அவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை விமர்சிப்பவர்கள் மர்மமான முறையில் உயிரிழப்பது இது முதல் முறை அல்ல.

முன்னதாக உக்ரைன் போரை வெளிப்படையாக விமர்சித்த ரஷ்ய நடனக் கலைஞர் விளாடிமிர் ஷ்க்லியாரோவ், கடந்த நவம்பரில் மர்மமான முறையில் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

 



Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்