Paristamil Navigation Paristamil advert login

ஜனாதிபதி-பிரதமர் - எலிசே மாளிகையில் அவசரச் சந்திப்பு!!

ஜனாதிபதி-பிரதமர் - எலிசே மாளிகையில் அவசரச் சந்திப்பு!!

25 பங்குனி 2025 செவ்வாய் 18:00 | பார்வைகள் : 1599


ஜனாதிபதியின் எலிசே மாளிகையில் இன்னும் சில நிமிடங்களில் அவசர சந்திப்பு ஒன்று இடம்பெற உள்ளது. ஜனாதிபதி மக்ரோன், பிரதமர் பிரான்சுவா பெய்ரூ மற்றும் ஆயுதப்படை அமைச்சர் Sébastien Lecornu ஆகியோர் இதில் கலந்துகொள்கின்றனர். 

மாலை 6 மணிக்கு இந்த சந்திப்பு எலிசே மாளிகையில் இடம்பெற உள்ளது. நாளை மறுநாள் வியாழக்கிழமை பரிசில் பாதுகாப்பு உச்சிமாநாடு ஒன்று இடம்பெற உள்ள நிலையில், அந்த சந்திப்பில் பிரான்ஸ் அறிவிக்கவேண்டிய முக்கிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு இந்த சந்திப்பு இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

யுக்ரேனுக்கு ஆதரவாக இடம்பெற உள்ள இந்த உச்சிமாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஒருநாள் முன்பாக யுக்ரேனிய ஜனாதிபதி செலன்ஸ்கி பரிசுக்கு வருகை தர உள்ளார். நாளை எலிசே மாளிகையில் வைத்து அவரை ஜனாதிபதி மக்ரோன் வரவேற்க உள்ளார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்