பிரெஞ்சு மக்களுக்கு பிடித்த உற்பத்தி நிறுவனம் - BIC சாதனை!!

26 பங்குனி 2025 புதன் 07:00 | பார்வைகள் : 4595
பிரெஞ்சு மக்களுக்கு பிடித்தமான நிறுவனம் எனும் பட்டத்தை BIC நிறுவனம் தட்டிச்சென்றுள்ளது.
BIC நிறுவனத்தின் உற்பத்திகள் பல ஆண்டுகளாக மக்களுக்கு பிடித்த பொருளாக இருக்கிறது. குறிப்பாக ஷேவ் எடுக்க பயன்படுத்தப்படும் ரேசர் ப்ளேடுகள், எந்த நிறுவனத்தின் தயாரிப்பு என்றாலும் அது 'பிக் ரேசர்' எனும் பெயரிலேயே பதியும் அளவுக்கு அதன் தரம் உலகம் முழுவதும் பிரபலம். அதேபோல் - நீலம், சிவப்பு என இரு மைக்குச்சிகளைக் கொண்ட 'கூர்மாத்தி பேனைகள் மற்றும் நான்கு கூர்மாத்திகளைக் கொண்ட பேனைகள் பால்ய வயது முதலே பிரபலமாகும். அதுவும் BIC நிறுவனத்தின் ஆகச்சிறந்த தயாரிப்புக்களில் ஒன்றாகும். இந்நிலையில், BIC நிறுவனம் முதன் முதலாக 'பிரான்சின் பிடித்தமான உற்பத்தி நிறுவனம்' «Marque Préférée des Français» எனும் பட்டத்தை வென்றுள்ளது.
பிரான்சின் 1,300 உற்பத்திகளைக் கொண்டு 4,900 பேரை ஆய்வுக்குட்படுத்தியிருந்த நிலையில் அனைத்து நிறுவனங்களையும் உதைத்துத்தள்ளி முன்னுக்கு வந்துள்ளது BIC.
இரண்டாவது இடத்தில் SAMSUNG நிறுவனமும், மூன்றாவது இடத்தில் Bonne Maman எனும் உணவு உற்பத்தி நிறுவனமும், நான்காவது இடத்தில் Barilla நிறுவனமும், ஐந்தாவது இடத்தில் St Michel நிறுவனமும் உள்ளன.