எகிப்தின் போர் நிறுத்த திட்டத்திற்கு ஒப்புக்கொண்ட ஹமாஸ்

30 பங்குனி 2025 ஞாயிறு 09:13 | பார்வைகள் : 847
ஐந்து பணயக் கைதிகளை விடுவிக்கும் புதிய எகிப்திய திட்டத்திற்கு ஹமாஸ் ஒப்புக்கொண்டதாக செய்தி வெளியாகியுள்ளது.
ஓராண்டுக்கு மேலாக இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் காஸா பகுதியில் 50,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்தனர்.
மேலும் 1,13,000க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் காஸா சுகாதார அதிகாரிகள் உறுதி செய்தனர்.
பணயக்கைதிகளை பரஸ்பரம் விடுவிக்க போர்நிறுத்த ஒப்பந்தம் செய்யப்பட்டது.
முதற்கட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் மார்ச் 1ஆம் திகதியுடன் முடிவடைந்தது. ஆனால் இரண்டாம் கட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் பற்றிய பேச்சுவார்த்தை உடன்பாடு ஏற்படாமல் இருந்த சூழலில், காஸா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.
இந்த நிலையில், எகிப்தின் பணய கைதி விடுவிப்பு மற்றும் போர்நிறுத்த ஒப்பந்தம் ஆகியவற்றுக்கான செயல் திட்டம் ஒன்றை வழங்கியது.
இதற்கு ஹமாஸ் அமைப்பும் ஒப்புக்கொள்ள, அமெரிக்க-இஸ்ரேலியரான ஈடன் அலெக்சாண்டர் உட்பட 5 பணய கைதிகளை விடுவிக்கப்பட உள்ளனர்.