Paristamil Navigation Paristamil advert login

ஐரோப்பாவில் இருந்து ஏவப்பட்ட முதல் ராக்கெட் - கடலில் விழுந்து நொருங்கியது

ஐரோப்பாவில் இருந்து ஏவப்பட்ட முதல் ராக்கெட்  -   கடலில் விழுந்து நொருங்கியது

1 சித்திரை 2025 செவ்வாய் 04:28 | பார்வைகள் : 716


விண்வெளிக்கு செயற்கைக்கோள் அனுப்புவதில் உலக நாடுகள் பலவும் போட்டிப்போடுகின்றன.

இந்த போட்டியில் தற்போது பல தனியார் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்களும் இணைந்துள்ளன.

அந்தவகையில் ஜெர்மனியைச் சேர்ந்த இசார் ஏரோஸ்பேஸ் என்ற தனியார் விண்வெளி நிறுவனமானது நார்வேயில் இருந்து சோதனை அடிப்படையில் ஸ்பெக்ட்ரம் என்ற ராக்கெட்டை ஏவியது.

ஐரோப்பாவில் இருந்து ஏவப்பட்ட முதல் ராக்கெட் இதுவாகும். திட்டமிட்டபடி அந்த ராக்கெட் விண்ணை நோக்கி சீறிப்பாய்ந்தது.

30 நொடிகள் வானில் பறந்த அந்த ராக்கெட் பின்னர் சுழன்றடித்துக் கொண்டு கடற்பகுதியில் விழுந்தது.

எனினும் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை ராக்கெட் எட்டியதாக இசார் ஏரோஸ்பேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது

 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்