Paristamil Navigation Paristamil advert login

கழுத்து கருமையை போக்க வழிகள்

கழுத்து கருமையை போக்க வழிகள்

1 தை 2023 ஞாயிறு 17:00 | பார்வைகள் : 10541


சிலர் பார்க்க அழகாக இருப்பார்கள். ஆனால், அவர்களது கழுத்துப் பகுதி மட்டும் கருப்பாக இருக்கும்.. அதனால், முகத்திற்கு பயன்படுத்தும் மேக்-அப்பை கழுத்து பகுதிக்கு சேர்த்துப் போடுவது நல்லது. 
 
* கோதுமை மாவு, ஓட்ஸ் பவுடர், பாசிப்பயறு மாவு – இந்த மூன்றையும் சமமாக எடுத்து பாலுடன் திக்காக குழைத்துக் கொள்ளவும். அதை கழுத்தில் தடவி சில நிமிடங்கள் மசாஜ் செய்து 20 நிமிடம் கழித்து கழுவிக் கொள்ளவும். இவ்வாறு தொடர்ந்து வாராம் 3 முறை செய்தால் நல்ல பலன் கிடைக்கும். 
 
* பப்பாளிபழத்தின் தோல், எலுமிச்சை பழத்தோல், ஆரஞ்சு பழத்தோல் – இதில் ஏதாவது ஒன்றை நன்றாக அழுத்தி கழுத்தில் தேய்த்து குளிக்கலாம். 
 
* முட்டைக்கோசை அரைத்து அந்த சாறையும் கருப்பாக நிறம் மாறிய கழுத்தில் தேய்க்கலாம். இதனுடன் சிறிது தேன் அல்லது எலுமிச்சை சாறு கலந்து தேய்ப்பது கழுத்து கருமையை போக்குவதோடு மினுமினுப்பையும் தரும். * பயத்த மாவு, ஆலீவ் ஆயில், ரோஸ் வாட்டர் – இவற்றை ஒன்றாக கலந்து கழுத்தில் பூசினாலும் கருமை நிறம் மறையும். 
 
* சிலருக்கு செயின் போட்டு, அதனால் பின் கழுத்து கருத்துப் போய் இருக்கும். அதனை போக்க சிறிது பால், தேன், எலுமிச்சை சாறு கலந்து கழுத்தில் தடவி 10 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் அலசி விடவும். கடலை மாவு தயிர் கலந்தும் தடவலாம். இதை ஒரு வாரம் தொடர்ந்து செய்து வந்தால் தான் பலன் கிடைக்கும்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்