Paristamil Navigation Paristamil advert login

அதிக உடற்பயிற்சி ஆபத்து

அதிக உடற்பயிற்சி ஆபத்து

1 தை 2023 ஞாயிறு 17:00 | பார்வைகள் : 10460


உடற்பயிற்சியை தினமும் தொடர்ந்து செய்து வந்தால் நன்கு பிட்டாகவும், சுறுசுறுப்புடனும் இருக்கலாம்.  தொப்பை அதிகமாக இருப்பவர்கள் விரைவில் தொப்பை குறைந்து பிட்டாக இருக்க வேண்டுமென்று ஜிம்மில் நீண்ட நேரம் உடற்பயிற்சி செய்கின்றனர்.

இப்படி ஒரே நேரத்தில் அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சி செய்தால், உடலில் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அதில் முதன்மையானது தான் உடல் வலி. பொதுவாக உடற்பயிற்சியை ஆரம்பித்த முதல் ஒரு வாரத்திற்கு உடல் வலி இருக்கத் தான் செய்யும்.

அதுவும் லேசான உடற்பயிற்சி செய்தாலே, கடுமையான உடல் வலி இருக்கும். அதுவே ஆரம்பத்திலேயே அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சி செய்தால், எவ்வளவு உடல் வலி ஏற்படும் என்பது உங்களுக்கே தெரியும். இது மட்டுமின்றி, நிறைய பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடும்.

அதிகமான உடற்பயிற்சியை மேற்கொள்வதால் ஏற்படும் உடல்நல பிரச்சனைகள் என்னவென்று பார்க்கலாம்.

அளவுக்கு அதிகமான உடற்பயிற்சியை மேற்கொண்டால் ஏற்படும் பக்க விளைவுகளில் ஒன்று தான் உடல் வலி. அதிலும் உடல் வலியான இரவில் படுக்கும் போது மட்டுமின்றி, நாள் முழுவதும் கடுமையான வலியுடன் இருக்க வேண்டி வரும்.

அதுமட்டுமல்லாமல், இப்படி உடற்பயிற்சியை தினமும் மேற்கொண்டு, ஒரு நாள் செல்லாமல் இருந்தால், அதை விட இரண்டு மடங்கு வலியை சந்திக்க நேரிடும். ஜிம்மில் ஒரே நேரத்தில் அதிகப்படியான எடையை தூக்குவதால், தசைகள் சோர்வடைந்து, அடிக்கடி கைகள் மற்றும் கால்கள் நடுங்க ஆரம்பிக்கும்.

குறிப்பாக அளவுக்கு அதிகமான உடற்பயிற்சியால், கடுமையான தலை வலி ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. உடற்பயிற்சி அதிகமாக செய்தால், தசைகளில் பிடிப்பு, சுளுக்கு போன்றவை ஏற்படும். இத்தகைய பிரச்சனை தசைகளானது அளவுக்கு அதிகமாக ஸ்ட்ரெட்ச் ஆவதோடு, அதிகப்படியான எடையை தாங்குவதால் ஏற்படுகிறது.

முக்கியமாக முதுகு வலி ஏற்படும். அதிலும் வயதாக வயதாக முதுகு வலியும் அதிகரிக்கும். எனவே கடுமையான உடற்பயிற்சியை மேற்கொள்ளும் முன்பு நன்கு யோசிக்க வேண்டும். அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சியை செய்தால், உடலில் நோயெதிர்ப்பு சக்தியின் அளவு குறைந்து, சளி, இருமல், காய்ச்சல் போன்றவை எளிதில் தொற்றும்.

உடற்பயிற்சி அளவுக்கு அதிகமானால், பசியின்மையால் பாதிக்கப்பட வேண்டியிருக்கும். இதனால் உடலில் போதிய சத்துக்கள் கிடைக்காமல், ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படும்.

பெண்கள் அளவுக்கு அதிகமாக ஸ்ட்ரெட்ச்சிங் உடற்பயிற்சியை செய்து வந்தால், பிற்காலத்தில் கருத்தரிப்பதில் பிரச்சனையை சந்திக்கக்கூடும். இடுப்பின் அளவானது முன்பே அளவுக்கு அதிகமாக விரிவடைந்து, தளர்ந்துவிடும்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்