ஐஸ்லாந்தில் எரிமலை வெடிப்பு

2 சித்திரை 2025 புதன் 16:13 | பார்வைகள் : 1950
ஐஸ்லாந்து தலைநகரின் தெற்கே செவ்வாய்க்கிழமை (1) எரிமலை ஒன்று வெடித்துள்ளது.
எரிமலை வெடிப்பினால் ஆரஞ்சு மற்றும் சிவப்பு நிறங்களில் எரிமலைக்குழம்பு மற்றும் புகை வெளியேறியுள்ளது.
இது சுற்றுலாப் பயணிகள் மற்றும் குடியிருப்பாளர்கள் வெளியேற்ற தூண்டியுள்ளது. எனினும் விமான போக்குவரத்து வழமை போல் இடம்பெற்று வருகிறது.
ஏராளமான பனிப்பாறைகள் மற்றும் எரிமலைகள் சூழ்ந்த வட அந்திலாந்திக் தீவான ஐஸ்லாந்தில் 2021 ஆம் ஆண்டு முதல் ரெய்க்ஜாவிக் நகரின் தெற்கே 11 எரிமலைகள் வெடித்துள்ளன. சுமார் 800 ஆண்டுகளுக்குப் பின்னர் செயலற்று இருந்த எரிமலைகள் செயற்பட ஆரம்பித்துள்ளன.
எரிமலை வெடிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஐஸ்லாந்து வளிமண்டலவியல் அலுவலகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த எரிமலை வெடிப்பு கிரைண்டாவிக் மீன்பிடி நகரத்திற்கு அருகிலுள்ள பாதுகாப்புத் தடைகளை ஊடுருவியுள்ளது. முன்னர் இடம்பெற்ற வெடிப்பு சம்பங்களுக்கு பின்னர் திரும்பி அவ்விடத்துக்குச் சென்ற குடியிருப்பாளர்களை வெளியேற்ற தூண்டியதோடு, அங்கு ஓராண்டுக்கு மேலாக பெரும்பாலான வீடுகள் வெறுமையாக உள்ளன.
தற்போது பாதுகாப்பு தடைக்குள் எரிமலைக்குழம்பு வருகிறது. ஆனால் இதுவரை இது மிகவும் குறைந்தளவான வெடிப்பாக இருப்பதாக நோர்டிக் எரிமலை மையத்தின் தலைவர் ரிக்கே பெடர்சன் குறிப்பிட்டுள்ளார்.
2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஏற்பட்ட எரிமலை வெடிப்புக்கு ஒத்ததாக இருந்தது எனவும், இது கிரிண்டாவிக் நகருக்குள் எரிமலைக்குழம்பை வெளியேற்றியது எனவும் தெரிவித்துள்ளார்.
ரெய்க்ஜேன்ஸ் தீபகற்பத்தில் ஏற்பட்ட வெடிப்புகள் இதுவரை தலைநகர் ரெய்க்ஜாவிக்கை நேரடியாகப் பாதிக்கவில்லை. சாம்பல் குறிப்பிடத்தக்க அளவில் பரவுவதால் விமானப் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படவில்லை.
பூமியின் மேலோட்டத்தில் உள்ள நீண்ட விரிசல்களிலிருந்து ஒரு எரிமலை திறப்புக்குப் பதிலாக எரிமலைக்குழம்பு வெளியேறுவதால் வகைப்படுத்தப்படும் பிளவு வெடிப்புகள் பல தசாப்தங்களாக அல்லது பல நூற்றாண்டுகளாக மீண்டும் மீண்டும் நிகழக்கூடும் என ஐஸ்லாந்து நிபுணர்கள் கணித்துள்ளனர்.
கிட்டத்தட்ட 400,000 பேர் வசிக்கும் வடக்கு அந்திலாந்திக் தீவுக்கு எரிமலை நீரூற்றுக்கள் மற்றும் எரிமலைகள் உட்பட அதன் கரடுமுரடான தன்மையை ஆராய ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் செல்கின்றனர்.
ஐஸ்லாந்து மத்திய அத்திலாந்திக் மலைத்தொடரின் அருகில் அமைந்துள்ளது. அங்கு யூரேசிய மற்றும் வட அமெரிக்க டெக்டோனிக் தகடுகள் பிரிந்து செல்கின்றன.