Paristamil Navigation Paristamil advert login

காசாவில் மின்சாரத் தடை- போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் முடக்கம்…

காசாவில் மின்சாரத் தடை- போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் முடக்கம்…

10 பங்குனி 2025 திங்கள் 08:41 | பார்வைகள் : 178


காசா பகுதிக்கு மின்சாரம் வழங்குவதை உடனடியாக நிறுத்த இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளது.

ஹமாஸ் பிடித்து வைத்துள்ள மீதமுள்ள பிணைக் கைதிகளை உடனடியாக விடுவிக்க அழுத்தம் கொடுக்கும் முயற்சியாக, காசா பகுதிக்கு மின்சாரம் வழங்குவதை இஸ்ரேல் அதிரடியாக நிறுத்தியுள்ளது.

இஸ்ரேலின் இந்த மின்சார தடை ஞாயிற்றுக்கிழமை முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனிய போராளிக் குழுவான ஹமாஸ் இடையே நிலவும் போர் நிறுத்தத்தை நீட்டிப்பது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெறவிருந்த நிலையில், இந்த மின்சாரத் தடை குழப்பமான சூழ்நிலையில் ஏற்படுத்தியுள்ளது.

காசா போர் தொடங்கியதில் இருந்து, இஸ்ரேல் இதுபோன்ற பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேலின் மின்சார தடை நடவடிக்கையை ஹமாஸ் அமைப்பினர் கடுமையாக கண்டித்துள்ளனர்.

காசா போரை நிரந்தரமாக முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்பதே தங்கள் குறிக்கோள் என்றும், போர் நிறுத்தத்தின் இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தைகளை உடனடியாக தொடங்க வேண்டும் என்றும் ஹமாஸ் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

ஆனால், பிணைக் கைதிகள் விடுவிப்பதில் கூடுதல முன்னேற்றம் தேவை என கூறி தற்போதைய முதல் போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏப்ரல் நடுப்பகுதி வரை நீட்டிக்க இஸ்ரேல் விரும்புகிறது.

இந்த நிலைப்பாட்டை இஸ்ரேல் வலுப்படுத்தும் முயற்சியாகவே காசாவுக்கான சமீபத்திய அத்தியாவசிய உதவி தடை மற்றும் மின்சாரத் தடை ஆகியவற்றை இஸ்ரேல் முன்னெடுத்து வருவதாக கூறப்படுகிறது.

 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்