Paristamil Navigation Paristamil advert login

தீப்பிடித்த எரிந்த அமெரிக்கா விமானம்

தீப்பிடித்த எரிந்த அமெரிக்கா விமானம்

14 பங்குனி 2025 வெள்ளி 08:15 | பார்வைகள் : 3323


அமெரிக்கன் ஏர்லைன்ஸ் போயிங் 737-800 விமானம் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது.

Colorado Springs விமான நிலையத்திலிருந்து Dallas Fort Worth நோக்கி பயணித்த விமானமே இவ்வாறு தீ பற்றி எரிந்துள்ளது.

விமானத்தின் இயந்திரத்தில் தொழில்நுட்பக் கோளாறு இருப்பதாக பணியாளர்கள் தெரிவித்ததை அடுத்து, விமானம் Denver சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கிய தரையிறக்கப்பட்ட நிலையில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

விமானத்தில் இருந்த 172 பயணிகளும் 6 பணியாளர்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்