தொடை பகுதியில் உள்ள சதை குறைய எளிய பயிற்சி
1 தை 2023 ஞாயிறு 17:00 | பார்வைகள் : 10004
உடல் எடை குறைக்க பல பயிற்சிகள் இருந்தாலும் சில பயிற்சிகள் உடனடியாக பலன் தரக்கூடியவை. அவ்வகையில் இந்த பயிற்சிகள் விரைவில் நல்ல பலனைத் தரக்கூடியது. இந்த பயிற்சியை வீட்டில் இருந்தபடியே செய்யலாம்.
இந்த பயிற்சிகளை 30 நிமிடம் தினமும் தொடர்ந்து செய்து வந்தால் 3 மாதத்தில் நல்ல பலன் கிடைப்பதை காணலாம். கால் மற்றும் தொடைப்பகுதியில் உள்ள சதை குறைய எளிய 7 உடற்பயிற்சிகள் இதோ...
ஒவ்வொரு பயிற்சியையும் 20 முதல் 25 முறை செய்ய வேண்டும்.
1.சேரில் உட்காந்துக்கொண்டு கால்களை மடக்கி தூக்கி இறக்கவும். இதனை போல் இரண்டு கால்களையும் மாற்றி மாற்றி 20 முறை செய்யவும்.
2.சேரில் உட்காந்து கால்களை நேராக தூக்கி இறக்கவும். இவ்வாறு 20 முறை செய்ய வேண்டும்.
3.சுவற்றில் ஒரு கை வைத்துக் கொண்டு காலை முன்னால் நீட்டி உடைப்பது போல் 30 முறை மெதுவாக செய்யவும்.
4.கீழே படுத்துக்கொண்டு தலைக்கு பின்னால் கைகளை வைத்துக்கொண்டு கால்களை மேலே தூக்கி இறக்கவும்.
5. தரையில் சைடாக படுத்துக்கொண்டு கால்களை 20 முறை தூக்கி இறக்கவும்
6.இப்ப நேராக நிற்கவும். உங்கள் இரண்டு கால்களையும் விரித்துக் கொள்ளவும் கைகளை தலைக்கு மேல் தூக்கி கை தட்டவும். 30 முறை இப்படி செய்யவும்
7. அதிகமாக மாடி படிகளில் ஏறி இறங்கவும். இதனை சரியான முறையில் தொடர்ந்து செய்து வந்தால் தொடை ஸ்லிம்மாகும்.